ஜார்கண்ட்டில் நாமக்கல் மாணவர் உயிரிழப்பு- தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்: டிடிவி தினகரன்
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் மதன்குமாரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் மதன்குமாரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மதன்குமாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் மதன்குமாரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.…
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 3, 2023
விடுதியின் மேற்கூரையில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மாணவர் மதன்குமார் உயிரிழந்திருக்கலாம் என ஜார்கண்ட் மாநில காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் மருத்துவ மாணவர் மதன்குமார் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மதன்குமாரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.