“அண்ணன் எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்றுள்ளோம்”- டிடிவி தினகரன்
எடப்பாடி கே பழனிச்சாமி அண்ணன் அவர்களே முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு இந்தக் கூட்டணிக்கு வந்திருக்கிறோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

9 வருடங்களுக்கு பிறகு மதுராந்தகத்தில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்ட மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அமமுக பொதுச்செயலாளர் தினகரனும் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய டிடிவி தினகரன், “தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அமமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அண்ணன் எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்றுள்ளோம். எங்களுக்குள் இருந்த பங்காளிச்சண்டை முடிந்துவிட்டது. எங்களுக்குள் சண்டனை, சச்சரவுகள் இருந்தாலும், மக்களின் நலன் கருதியும், பிரதமரின் அழைப்பை ஏற்றும் இணைந்துள்ளோம். நாங்கள் எல்லாம் அம்மாவின் தொண்டர்கள், புரட்சித் தலைவர் வழி வந்தவர்கள். அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று வந்துள்ளேன். அம்மாவின் ஆட்சியை 2026ல் அமைப்போம். நானும் எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதாவின் தொண்டர்கள். நாங்கள் எதிரியாக இருந்தது உண்மைதான். பிரதமர் அழைப்பை ஏற்று கோபங்களை விடுத்து கூட்டணிக்கு வந்துள்ளோம்.
தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. மக்கள் ஆட்சியை அமைக்கவும், திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவும் ஈபிஎஸ் உடன் இணைந்துள்ளோம். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்படவேண்டும் என பிரதமர் மோடி இங்கு வந்துள்ளார். நாங்கள் எந்த அழுத்தமும் இன்றி NDA கூட்டணிக்கு வந்துள்ளோம்” என்றார்.

