ஜெயலலிதா படத்தை பயன்படுத்த பாமகவிற்கு உரிமை உள்ளது- டிடிவி தினகரன்

 
ஜெயலலிதா படத்தை பயன்படுத்த பாமகவிற்கு அனைத்து உரிமையும் இருக்கிறது - டிடிவி தினகரன்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜி.கே.வாசன், பாரிவேந்தர், தேவநாதன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளரை ஆதரித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட பயந்து அதிமுக ஒதுங்கி விட்டது. நானும் ஓ. பன்னீர்செல்வமும் இந்தகூட்டணியில் இருக்கிறோம். எனவே ஜெயலலிதா படத்தை பயன்படுத்த பாமகவிற்கு அனைத்து உரிமையும் இருக்கிறது.
 

Image

தேர்தலில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படம் போட்டதற்கு  சிலர் எதிர்கின்றனர். ஆனால் 2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அப்படிப்பட்ட கட்சி வேட்பாளருக்கு ஜெயலலிதா படம் போடுவது பொறுத்தமானது. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட நானும், ஓ.பி.எஸ் ம் இந்த கூட்டணியில் உள்ளோம், ஆனால் தற்போது தவறான கையில் அதிமுக மாட்டிக்கொண்டுள்ளது. அதனை நானும் , ஓ.பி.எஸ்-ம் தொடர்ந்து போராடி வருகிறோம்’ என்றார்.