“திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விஜயை அழித்து விடுவார்கள்”- டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் அரசியலில் எக்ஸ்பயரி டேட் என்று முன்னாள் அமைச்சர் ஆர்வி உதயகுமார் கூறியதற்கு, இன்னும் ஒரே மாதத்தில் யாரு எக்ஸ்பயரி ஆகப்போறாங்கனு தெரியவரும் என அமமுக கழக பொது செயலாளர டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “எடப்பாடி அதிமுகவில் உள்ள தொண்டர்களை ஏமாற்றுவதற்காக தவெகவுடன் கூட்டணி என்று எடப்பாடி கூறி வருகிறார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விஜயை அழித்து விடுவார்கள், அதனால் அதிமுகவோடு விஜய் கூட்டணி வைப்பார் என்று ஏமாற்றப்படுகிறது. இது ஆடு நனையுதேன்னு ஓனாய் அழுதது போல், புலிக்கு பயந்த வங்க எல்லாம் என் மீது படுத்து கொள்ளுங்கள் என்ற கூற்று போல் உள்ளது. அதே போல திமுக தரப்பில் நாங்க ஆட்சிக்கு வந்தால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது, அதனை சட்டரீதியாக நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தருவோம்,கொடநாடு கொலைக்கு குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் அவர்கள் தப்ப முடியாது என்று கூறி இதுவரை நடவடிக்கை இல்லை.ஆண்ட கட்சிகள் மாறி மாறி மக்களை ஏமாற்றி வருகிறது. பாலை ருசித்த பூனை அதனை மீண்டும் அடைய துடிப்பது போல் இரண்டு கட்சிகளும் செயல்படுகிறது.
முன்னதாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச்செயலாளருக்கு மாலை அணிவித்து வேல் வழங்கி மரியாதை செய்யப்பட்டது அப்போது அவர் பேசுகையில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் கூட்டணி வைக்கும் கட்சி தான் ஆட்சியை அமைக்கும்” என பேசினார்.


