“மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டது உலகத்திற்கே தெரியும்”- டிடிவி தினகரன்
மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டது உலகத்திற்கே தெரியும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 50 ஆண்டுகால அரசியல் வரலாறு உள்ளவர். அவர் மிசாவில் கைது செய்யப்பட்டது உலகத்திற்கே தெரியும் என கூறியுள்ளார். அதுப்பற்றி குதர்க்கமா, எவ்வளவு வன்மமா ஒரு கத்துக்குட்டி Detention Order கேட்குது.. அவருக்கு அடிபட்டதை பழித்துக் காட்டினார் முதல்வர் விஜய். இடைத்தேர்தலில் துரோகிகளுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள். அதிமுக வெற்றி பெற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உதவிகரமாக இருப்போம். தமிழ்நாட்டில் இதுவரை கேள்விப்படாத அளவிற்கு மோசமான கொஞ்சம் கூட அறிவு முதிர்ச்சி இல்லாதவர்களிடம் ஆட்சி கொடுக்கப்பட்டுள்ளது, இந்த ஆட்சி உறுதியாக முடிவுக்கு வரும்” என்றார்.

