பழனிசாமியின் பதவி வெறி, சுயரூபம் தொண்டர்களுக்கு தெரிய ஆரம்பித்துவிட்டது- டிடிவி தினகரன்

 
ttv dhinakaran

எடப்பாடி பழனிச்சாமியை, ராஜதந்திரி என்று சொன்னவர்கள், அவர் நம்பிக்கை துரோகம் செய்ததை ஒத்துகொண்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

TTV

புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “அதிமுகவின் 4 ஆண்டுகள் ஆட்சியில், எடப்பாடி பழனிச்சாமி சாணக்கியர் ஆக தெரிந்தார். அவரை ராஜதந்திரி என்று சொன்னவர்கள், அவர் நம்பிக்கை துரோகம் செய்ததை ஒத்து கொண்டுள்ளனர். ஆட்சி அதிகாரம் இல்லையென்றால் பழனிசாமி இல்லை. குப்பன், சுப்பன் கூட ஆட்சி நடத்திட முடியும். அந்த கட்சி தற்போது பலவீனம் அடைந்து உள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லை. இரட்டை இலை சின்னத்தை வைத்து இருப்பதால் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிவிட முடியாது. இரட்டை இலை சின்னம் வைத்து இருக்கும் ஒரே காரணத்தால், எடப்பாடி பழனிசாமி தரப்பினரை நம்பி இயக்கம் இருக்கிறது. பழனிசாமியின் சுயரூபம் வெளியே தெரிந்து விட்டது. அவரின்  பதவி வெறி, சுயநலம் போன்றவை தொண்டர்கள், பொதுமக்களுக்கு தெரிந்து விட்டது. வருங்காலத்தில் அந்த கட்சி பலவீனப்படும். பலவீனம் அடைந்து வருகிறது.ஓரே நாடு, ஓரே தேர்தல் என்பது தமிழ்நாடு மக்களின் நிலைப்பாடு என்னவோ, அது தான் அமமுகவின் நிலைப்பாடு” எனக் கூறினார்.