மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?- தினகரன்

 
மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?- தினகரன் 

மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?  என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

சென்னையில் ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "பணவீக்கம் அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகள் பிற மாநிலங்களுக்கு செல்கின்றன. இளைஞர்களுக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதையெல்லாம் விட்டுவிட்டு, தமிழகத்தையே தனியார்மயமாக்க முயல்கிறார் முதல்வர் விஜய். தவெக அமைச்சர்கள் பலர் சொத்து சேர்த்துள்ளனர். இது குறித்து ஆளுநரிடம் புகாரளிக்கவுள்ளோம். அன்பில் மகேஸ் ஊழல் செய்ததாக கைது செய்தனர். மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? விலைவாசி விண்ணை முட்டுகிறது என உண்மையை கூறிய கலையரசனை மிரட்டும் நிலை உள்ளது. உண்மையை வெளியில் சொல்பவர்களை சினிமாவில் மிரட்டுவது போல் மிரட்டிப் பார்க்கிறார்.  ரூ.5 கோடி கேட்டது யாரு? நீங்க என்ன ஹரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டுக்காரங்களா? ஓபன்-ஆ சொல்ல மாட்டிங்களா? தமிழகத்தில் 23-ம் புலிகேசி ஆட்சி நடக்கிறது.

இன்றைய அமைச்சர்கள் யார் யாரெல்லாம் என்னென்ன சொத்து சேர்த்துள்ளார்கள் என்ற தகவல் எல்லாம் வந்துகொண்டுதான் இருக்கிறது. அதையெல்லாம் உறுதிப்படுத்திவிட்டு கவர்னரிடம் மனு கொடுப்போம். உறுதியாக இந்த ஆட்சி தானாகவே விழுந்துவிடும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது, இந்த ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசு அதை சரி செய்ய வேண்டும். இந்த ஆட்சியில் சுத்தமாக நிர்வாக திறமை இல்லை. போற ஸ்பீடுல அதே விழுந்துரும். எந்த துறைகளிலும் ஊழல் குறைந்ததாக இல்லை." என்றார்.