"2026 தேர்தலில் திமுக வெற்றி பெறுவது கடினம்"- டிடிவி தினகரன்

 
ttv ttv

2026 தேர்தலில் அமமுகவை தவிர்த்து விட்டு எந்த கட்சியும் ஆட்சியில் அமர முடியாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறுவது கடினம். திமுக ஆட்சியில் செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் வீதிக்கு வந்து போராடுகின்றனர். 2026 தேர்தலில் அமமுகவை தவிர்த்து விட்டு எந்த கட்சியும் ஆட்சியில் அமர முடியாது. கூட்டணி தொடர்பாக எங்களை யாரும் மிரட்ட முடியாது. அன்போடு அணுகி வருகிறார்கள்” என்றார்.