அதிமுகவை மீட்டு எடுத்து பலப்படுத்தும் கட்டாயம் அமமுக தொண்டருக்கு உண்டு- டிடிவி தினகரன்

 
  டிடிவி தினகரன்

பிறந்தநாள்‌ விழாவை யொட்டி, புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்தார். இதே போல் அதிமுகவினர் மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

ttv

புதுச்சேரி பஸ் நிலையம் எதிரே உள்ள ‌எம்ஜிஆர் சிலைக்கு அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “தொண்டர்கள் விழித்து கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிச்சாமிக்கு காவடி தூக்கினால் கட்சிக்கு முடிவுரை எழுதி விடுவார். அதிமுகவை மீட்டு எடுத்து பலப்படுத்தும் கட்டாயம் அமமுக தொண்டருக்கு உண்டு. எடப்பாடி பழனிச்சாமி கட்சித்தலைவரானதும், முதல்வரானதும் லாட்டரி சீட்டு அடித்தது போன்ற யோகம் தான். அவர் சிறைக்கு செல்லாமல் இருக்கவும், கொலை கொள்ளை வழக்கு வராமல் இருக்கவும், ஊழல் வழக்கு வராமல் இருக்கவும் திமுகவின் பி டீம் ஆக செயல்படுகிறார். திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக செயல்படுவதால் சிறைக்கு செல்லாமல் இருக்க பழனிச்சாமி போல் சிலர் பயன்படுத்துகிறார்கள். வரும் 2026 தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி விலகி ஓடிவிடுவார்” என்றார்.