ஓபிஎஸ், பாஜக அரசுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி- டிடிவி தினகரன்

 
ttv dhinakaran

ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுவோம் என்று டிடிவி அறிவித்திருந்த நிலையில் பாஜக உடன் கூட்டணி என ஓபிஎஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில் காரைக்குடியில் அமமுக  பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

Image

அப்போது பேசிய அவர், “பல கட்சியினருடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம், ஓபிஎஸ் அவருடைய நிலைப்பாட்டை கூறியிருக்கிறார். கூட்டணி குறித்த எந்த முடிவும் இப்போது எடுக்கப்படவில்லை. இந்திய பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம் பெறும்.

ஜனநாய நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடலாம். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு  ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் தமிழக மக்கள் தான். இதைப் பற்றி கட்சி தலைவராக கருத்து சொல்வது நாகரீகமாக இருக்காது. முதல்வர் வெளிநாடு செல்வதில் கருத்து வேறுபாடு கிடையாது, தமிழ்நாட்டிற்கு நிறைய முதலீடுகளை முதல்வர் கொண்டுவர வேண்டும் என்பது என் விருப்பம். அமமுக , கூட்டணி  சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரிக்க பிரச்சாரத்திற்கு செல்ல இருப்பதால்  தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கவில்லை. நிர்வாகிகள், தொண்டர்கள் கோரிக்கையை ஏற்று தேர்தலில் போட்டியிடுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். நான்கரை ஆண்டுகள் ஆட்சிக்கு உதவிய ஓ.பி.எஸ்க்கும், மத்திய அரசுக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் பேச்சுக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்” என்றார்.