ஸ்டாலின் வீட்டில் முதலில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும்- டிடிவி தினகரன்

 
  டிடிவி தினகரன்   டிடிவி தினகரன்

மீண்டும் பாஜக அரசு மத்தியில் வந்து விடுமோ என்ற பயத்தில் திமுக அரசு உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 “அதிமுக 5,000 முதல் 10,000 வாக்குகள் தான் வாங்கும்”-  டிடிவி தினகரன் பேட்டி

காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் திமுக அரசை கண்டித்தும், தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் கட்சியை கண்டித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமமுக  சார்பில் பெரியார் சிலை முன்பு    கட்சியின் பொதுச்செயலாளர்  டி.டி.தினகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அமமுகவினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய டி.டி.வி.தினகரன், “காவிரி என்பது தமிழ்நாட்டிற்கு கடவுள் கொடுத்த கொடை. கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. குறிப்பாக நாகப்பட்டினத்தில் குறுவை சாகுபடி பயிருக்கு போதிய தண்ணீரின்றி  கால் நடைகள் மேய்ந்து கொண்டு இருக்கிறது. இதனை பார்த்து விவசாயிகள் கதறி அழுதனர். அதை பார்க்கும் போது மன வேதனை அடைந்துள்ளது. மீண்டும் பாஜக அரசு மத்தியில வந்து விடுமோ என்ற பயத்தில் திமுக அரசு பயப்படுகிறது.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி வழங்க வேண்டிய உபரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களை திமுக அரசு பழிவாங்கி வருகிறது. திமுக கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ, எம்பி சீட் வாங்குவதற்காக கூட்டணியில் இருந்து வருகிறார்கள், அவர்கள் எதை பற்றியும் பேசவில்லை . திமுகவினர் காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுக்காமல் இருந்து வருகிறார்கள். அமமுக கூட்டணி கட்சிக்காக ஏங்கவில்லை. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அமமுக வெற்றி பெறுவோம்.

டிடிவி தினகரன்

கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்கவில்லை. திமுகவினர் பாஜகவை கண்டு பயப்படுகிறார்கள். தமிழகத்தில் மாற்று சக்தியாக அமமுக மாற போகிறது. காவிரி பிரச்சனையில் திமுக கோட்டைவிட்டுவிட்டது . தற்போது சனாதனத்தை பற்றி பேசி வருகிறார்கள் அரசு ஊழியர்கள், மக்கள் பிரச்சனை , தொழிலாளர்கள் , அரசு , ஆசிரியர்கள் பிரச்சினை , விலைவாசி உயர்வு  இவற்றையெல்லாம் திசை திருப்புவதற்கு ஸ்டாலின் தன் மகனைவிட்டு சனாதனத்தை பேச சொல்லியிருக்கிறார் . சனாதனம் என்று ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை . அதை ஒழிக்க சொல்லியிருக்கிறார் . தமிழகத்தில் ஒழிக்க பட வேண்டியது திமுகவை தான். உதயநிதி உங்கள் வீட்டில் முதலில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும். திமுகவை நம்பி போன செந்தில் பாலாஜி குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது. அடுத்து சேகர்பாபு தான் . தீபாவளிக்கு, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர் ஓண்ம் பண்டிகைக்கு மலையாளத்தில் வாழ்த்து சொல்கிறார். இது வேடிக்கையாக உள்ளது”  என தெரிவித்தார்