"உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே"... தினகரனின் மே தின வாழ்த்து!!

 
ttv

 மே தினத்தில் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் உழைப்பவர்களை பெருமிதத்தோடு கொண்டாடுவோம் என்று டிடிவி தினகரன் வாழ்த்து கூறியுள்ளார்.

tn

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட தொழிலாளர்களின் உரிமைகளைப் போராடி வென்றெடுத்ததைக் கொண்டாடும் மே தினத்தில் உழைப்பவர்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
tn

உழைப்பவரே உலகில் உயர்ந்தவர் என்பதை உரக்கச் சொல்லும் இந்த நன்நாளில் ஒவ்வொன்றையும் நமக்கு உருவாக்கித் தருகிறவர்களை நன்றியோடு போற்றுவோம். அத்தகையோரின் உழைப்பால்தான் இந்த உலகம் தொய்வின்றி இயங்கிக்கொண்டிருக்கிறது. உழைப்பவர்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்துப் பலன்களையும், அங்கீகாரத்தையும் தடையின்றி கொடுக்கிற அரசாங்கமும், சமூகமும்தான் சிறந்து விளங்க முடியும். எனவே உடலாலும், அறிவாலும் உழைக்கிற யாருக்கும் எந்த இடத்திலும் உழைப்புச் சுரண்டல் நிகழ்ந்திட அனுமதிக்காமல், உழைப்பவர்களுக்கே முதல் மரியாதை என்பதை உறுதிப்படுத்துவோம். "ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே! உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே!" என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பட பாடல் வரிகளை உண்மையாக்குவோம். மே தினத்தில் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் உழைப்பவர்களை பெருமிதத்தோடு கொண்டாடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.