தேனியில் தங்க தமிழ்ச் செல்வன் முன்னிலை! டிடிவி தினகரன் தோல்வி முகம்

 
தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரன்

தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி‌.வி.தினகரன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

உளவுத்துறை மூலம் போன தகவல்.. அதிமுகவை விட்டு டிடிவி தினகரன் விலக்கப்பட  காரணம்: போட்டு உடைத்த தங்கம்! | Why TTV Dhinakaran was kept away from  AIADMK for 14 years, says ...


உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது.  தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.  இந்தியா அளவில்  பொருத்தவரை பாஜக கூட்டணி முன்னிலை வகுத்து வருகிறது.  இருப்பினும் கருத்துக்கணிப்பு முடிவுகளை விட இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.  குறிப்பாக தமிழகத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்டார் வேட்பாளரான அமமுக பொதுச்செயலாளர் டி.டி‌.வி.தினகரன் பின்னடைவை சந்தித்துள்ளார். அவர் போட்டியிட்ட தேனி தொகுதியில், திமுக: 32700, அதிமுக : 10748, அமமுக : 18135, நாம் தமிழர் : 4111 ஆகிய வாக்குகளை பெற்றுள்ளன. 
திமுக வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வன் 14565 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருப்பதால் டி.டி‌.வி.தினகரன் தோல்வி முகத்தை சந்தித்துவருகிறார்.