மக்களவை சபாநாயகராக தேர்வாகியுள்ள ஓம் பிர்லாவுக்கு தினகரன் வாழ்த்து!!

 
ttv

18 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வாகியுள்ள நிலையில் தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Om Birla

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், 18 வது மக்களவையின் சபாநாயகராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட மாண்புமிகு திரு.ஓம் பிர்லா அவர்கள் தொடர்ந்து  இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 

tt

ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் பயனுள்ள விவாதங்களின் மூலம்  மக்களவையோடு மக்கள் பிரதிநிதிகளையும் சிறப்பாக வழிநடத்திச் செல்ல மாண்புமிகு ஓம் பிர்லா அவர்களுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.