துணிச்சல்மிக்க இளம் அரசியல்வாதி அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்- டிடிவி தினகரன்

 
ttv dhinakaran birthday wishes to annamalai

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவரும் அன்புச் சகோதரருமான அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை மனசை குளிர வைத்த அமமுக.. டிடிவி தினகரன் சைலண்ட் சம்பவம்  பண்ணுறாரே.. புதுசா இருக்கே! | AMMK TTV Dinakaran works hard on the ground  for BJP and Annamalai in Lok Sabha ...

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவரும் அன்புச் சகோதரருமான திரு.அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய துணிச்சல்மிக்க இளம் அரசியல்வாதியான திரு.அண்ணாமலை அவர்கள்,  பூரண உடல் நலத்துடன், நீண்டகாலம் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு, இந்த பிறந்தநாள், தங்களது துணிவான முயற்சிகளுக்கு வெற்றியை பரிசாக வழங்கும் நாளாக அமைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.