வ.உ.சிதம்பரனாரின் வரலாற்றை எந்நாளும் போற்றி மகிழ்வோம் - தினகரன் ட்வீட்
Updated: Sep 5, 2023, 10:48 IST1693891080435
வ.உ.சிதம்பரனாரின் வரலாற்றை எந்நாளும் போற்றி மகிழ்வோம் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் தன் இறுதி மூச்சு வரை சுதந்திரத்திற்காக போராடிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாள் இன்று.
தன் சொத்து, இளமை, வாழ்நாள் என அனைத்தையும் துறந்து ஈடு இணையற்ற தியாகங்களை செய்து நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்று தந்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் வரலாற்றை எந்நாளும் போற்றி மகிழ்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.