ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் - தினகரன் வாழ்த்து
Aug 30, 2023, 12:30 IST1693378813890

ரக்ஷா பந்தன் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தினகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் , சகோதர, சகோதரிகளுக்கு இடையே ஆழமாக வேரூன்றிய அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாட்டை உணர்த்தும் ரக்ஷா பந்தன் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் எனது நல்வாழ்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரத்துவத்தை போற்றும் வகையில் ரக்ஷா பந்தன் கொண்டாடும் இந்நாளில், அனைத்து பெண்களின் பெருமையை நிலைநாட்டவும், அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் நாம் அனைவரும் உறுதியேற்போம்.என்று குறிப்பிட்டுள்ளார்.