திருப்பதியில் மீண்டும் சர்ச்சைக்குரிய வீடியோ எடுத்த டிடிஎப் வாசன்

 
ttf

டிடிஎஃப் வாசன் சிறார்களை கவர்வதற்கு பைக் ஓட்டும்போது பல வித்தைகளை காண்பித்து வழக்குகளை சந்தித்து வருகிறார். இவ்வாறு  பைக் வித்தை காட்ட முயன்று டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கி அவருக்கு கை, கால்கள் உடைந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்காக வழக்கை சந்தித்து, நீதிமன்றத்தின் மூலம் பைக் ஓட்டும்  உரிமத்தை நீதிமன்றம்  ரத்து செய்தது. 

இதனால் பைக் ஓட்டுவதை நிறுத்தி தற்போது எங்கு சென்றாலும் காரில் தான் பயணம் மேற்கொள்கிறார்.சமூகவளைத்தில் தொடர்ந்து   சர்ச்சைக்கு உண்டாக பதிவுகளை போட்டு பிரபலம் ஆவதை வழக்கமாக கொண்டுள்ள  டிடிஎஃப் வாசன் தற்போது புது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக    நாராயணகிரி பூங்காவில் அமைக்கப்பட்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்த நிலையில்   டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது நண்பர்கள் தரிசனத்திற்காக கதவுகளை திறப்பது போன்று அருகில் சென்று பின்னர் ஏமாற்றி வரும் வீடியோவை பதிவு செய்து அந்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் டிடிஎஃப் வாசன் பதிவிட்டார். இந்த  வீடியோ வெளியிட்ட டிடிஎஃப் வாசனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 


இந்த வீடியோ வைரலாக  பரவிய நிலையில் பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இது குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.