ஸ்னேக் பாபுவாக மாறிய டிடிஎப் வாசன்! மீண்டும் சர்ச்சையில் சிக்கியதால் பரபரப்பு

 
ஸ்னேக் பாபுவாக மாறிய டிடிஎப் வாசன்! மீண்டும் சர்ச்சையில் சிக்கியதால் பரபரப்பு

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அரிய வகை பாம்பினை வளர்ப்பு பிராணியாக வைத்து வீடியோ வெளியிட்ட விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர். போக்குவரத்து விதிகளை மீறி பல்வேறு குற்றங்கள் செய்ததற்காக போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக அவரது வாகன ஓட்டுனர் உரிமமும் தடை செய்யப்பட்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து சட்டத்தை மீறும் வகையில் டி டி எப் வாசன் செயல்படும் வகையில் நேற்று புதிய வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த மூன்று வாரத்திற்கு முன்பு வளர்ப்பு பிராணி போல் பாம்பு ஒன்றை வாங்கப் போவதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். தற்போது அரிய வகை பால் பைத்தான் வகை மலை பாம்பு ஒன்றை கையில் மல்லிகை பூ போல் சுற்றி வைத்துக் கொண்டு வாகனம் ஒன்றில் வீடியோ வெளியிட்டு உள்ள இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  இந்த வீடியோ தற்போது வனத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது.

குறிப்பாக வாசன் கையில் வைத்திருக்கும் பாம்பு வகை மிகவும் அரிதான வகை என்றும், அந்த வகை பாம்பை கடத்தப்பட்டு வந்து விற்கப்பட்டுள்ளதா எனவும் விசாரணை செய்கின்றனர். மேலும் இதற்கான உரிய லைசென்ஸ் அனுமதி பெற்றுள்ளாரா என விசாரணை செய்கின்றனர். இது போன்று அரிய வகை பாம்பை முறையாக கையாள வேண்டும் எனவும், இல்லையெனில் இந்த பாம்பு ஒரு வித டாக்சினை வெளிப்படுத்தி மனிதற்களுக்கு தீங்கு ஏற்படும் என்றும் வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டு வழக்குகளை சந்தித்து வரும் டி டி எஃப் வாசன் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.