நீதி தேவதைக்கு நன்றி - டிடிஎப் வாசன்

 
டிடிஎப் வாசன்

செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Image

செல்போன் பேசியபடி காரை ஓட்டிய வழக்கில் ஜாமின் யூடியூபர், பைக் ரேஸருமான டிடிஎப் வாசன் கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி பகுதிக்கு காரில் வந்த அவர், செல்போனில் பேசிக் கொண்டே காரை ஓட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை Twin Throttlers என்ற ID ல் YOUTUBE சேனலில் பதிவிட்டுள்ளார். 

இதையடுத்து பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மதுரை அண்ணா நகர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செல்போன் பேசியபடி கார் ஒட்டிய வழக்கில் கைதான யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்கி மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற நடைமுறைகள் நிறைவடைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிஎப் வாசன், “கொடுத்த இன்னல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் நன்றி. நீதி தேவதையை நம்பினேன். நீதி கிடைத்திருக்கிறது. நீதி தேவதைக்கு நன்றி. மிகப்பெரிய வரலாற்று வெற்றியை நேர்மையாக பெற்றிருக்கிறேன். மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.