சிறையிலிருந்து வெளியே வந்தார் டிடிஎஃப் வாசன்! மீண்டும் பைக் ஓட்டுவேன் என பேட்டி

 
சிறையிலிருந்து வெளியே வந்தார் டிடிஎஃப் வாசன்

47 நாட்களுக்கு பிறகு சென்னை புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார் யூடியூபர் டி.டி.எஃப் வாசன்.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாசனுக்கு, நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதையடுத்து அவர் புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார்.டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஜாமினில் விடுதலையான பின்னர் செய்தியாளர்களிட,ம் பேசிய டி.டி.எஃப் வாசன், “டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன். கைபோனதை விட லைசென்ஸ் போனதற்குதான் அதிகம் கலங்கினேன். கண்டிப்பாக பைக் ஓட்டுவேன். படமும் நடிப்பேன். எங்க போனாலும் ஹெல்மேட் போடுங்கள். சிறையில் அதிகாரிகள் நல்ல முறையில் நடத்தினர். அனைவரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். பைக் தான் எனக்கு எல்லாமே. என்னுடைய பேஷன் தான், எனக்கு புரொபஷன். என் மீது கொடுக்கப்பட்ட புகார் தவறானது, என்னை பாலோ செய்வதால் யாரும் தவறான வழிக்கு செல்வதில்லை. நேபால் மட்டுமே சென்றுள்ள நிலையில் தன்னுடைய பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் பாஸ்போர்ட் எடுப்போம், வெளிநாடு செல்வோம். ஹெல்மெட் உள்ளிட்ட பொருட்கள் தொடர்பாக புதிதாக தொழில் தொடங்க உள்ளேன். ” என்றார்.