விபத்தில் தூக்கிவீசப்பட்ட பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன்- பரபரப்பு வீடியோ
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக்கில் சென்றபோது காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக் வீலிங் செய்து கொண்டிருந்தபோது டிடிஎஃப் வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு கை உடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் அருகே சாகசம் செய்ய முயன்றபோது சாலையோர பள்ளத்தில் டிடிஃஎப் வாசன் விழுந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சுஸுகி ஹயபுசா வகை பைக்கில் பயணம் செய்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காவல்துறை பல முறை எச்சரித்தும் விதிகளை மீறி வீலிங் செய்ததால் விபத்து நேர்ந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் விபத்துக்குள்ளான வாகனத்தை கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
*பிரபல யூடியூபர் TTF வாசன் பைக்கில் சென்றபோது காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்ததாக தகவல்* pic.twitter.com/sS03bUEPsK
— நரசிம்மன் 🇮🇳🕉️🚩 (@Narasim18037507) September 17, 2023
கோவை மேட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் இருசக்கர வாகனத்தின் மூலம் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து அதனை யூட்யூபில் பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டவர். ஒரு கட்டத்தில் அதிவேகமாக வாகனங்களை இயக்கி SPEEDO METER இல் வாகனம் செல்லும் வேகத்தை பதிவு செய்து அதனை தனது "twin throttles" youtube பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்தார். இவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது. இதன் காரணமாக டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் எனும் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.