டிடிஎப் வாசனின் வங்கி கணக்கு முடக்கம்

 
ttf

திருப்பதி மலையில் வீடியோ எடுத்த விவகாரத்தில் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் வங்கி கணக்கு முடக்கக்கப்பட்டுள்ளது.

டிடிஎஃப் வாசன் மீது திருப்பதியில் வழக்குப் பதிவு

யூடியூப் மூலம் பிரபலமான   டிடி.எப். வாசன்  கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்காக வந்தார். அப்போது டி.டி.எப். வாசன் மற்றும் அவரது நண்பர்கள்  சாமி தரிசனத்திற்கான  வரிசையில் செல்லும் போது தேவஸ்தான ஊழியர்கள் போன்று பூட்டை திறப்பது போன்று நடித்து பக்தர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில்  பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் பற்றி திருமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவருடைய வங்கி கணக்கை திருமலை போலீசார் முடக்கி வைத்திருப்பதாக வாசனின் வழக்கறிஞர் முத்து திருப்பதி திருமலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வாசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்து இருப்பதாகவும் ஜாமின் வந்தவுடன் விசாரனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக போலீசாருக்கு தெரிவித்துள்ளோம். மேலும் அவர் மீது தொடரப்பட்ட வழக்குகுறித்த விவரங்களை கேட்டு பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.