சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை கோரும் தீர்மானம்- பெரும்பான்மையை நிரூபிக்கும் நடைமுறைகள் என்ன?

 
அ

முதல்வர் விஜய் அரசு மீது நாளை காலை 9.30 மணிக்கு நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. முதல்வர் விஜய் முன்மொழியும் அரசினர் தீர்மானம் சட்டமன்றத்தில் நாளை காலை 9.30 மணிக்கு வருகிறது.

ஜனநாயகத்தின் இதயமாக சட்டப்பேரவை செயல்பட வேண்டும்: முதலமைச்சர் விஜய் -  Makkal Kural

சட்டமன்ற தேர்தல் முடிவுகளின்படி, ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், சட்டப்பேரவையில் மே 13ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். இதற்காக நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. சபாநாயகர் ஆளுங்கட்சிக்கு ஆதரவு கோர வாய்ப்பளித்த பிறகு, வாக்கெடுப்பிற்காக அவையின் அனைத்து கதவுகளும் மூடப்படும். வாக்கெடுப்பின்போது அவையில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவர். இதற்காக அவை ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும். வாக்கெடுப்பில் பங்கேற்ற மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆதரவு அளித்தால் மட்டுமே பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதாக கருதப்படும். வாக்கெடுப்பு முடிந்தவுடன், எண்ணிக் கணிக்கும் முறைப்படி பெறப்பட்ட இறுதி முடிவை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.