விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் லாரி மோதி விபத்து- பணியாளர் பலி
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் டோல் பூத்தில் முட்டை லாரி மோதியதில் பணியிலிருந்த ஊழியருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கனேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இரவு பணியிலிருந்த போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சென்ற முட்டை லாரியானது டோல்கேட்டில் நின்றிருந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரியானது சுங்கச்சாவடி டோல் பூத் மற்றும் அதன் அருகே பணியிலிருந்த கணேசன் மணிகண்டன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கணேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மணிகண்டன் காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் தெரிவிக்கபட்டதின் விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் இறந்த கணேசனின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சுங்கச்சாவடியில் உள்ள ஊழியர்கள் டோல் பூத்தில் உட்கார வைக்காமல் வெளியில் நிற்க வைப்பதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.