சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீது லாரி மோதி விபத்து; 5 பேர் பலி..!!
Jul 3, 2026, 09:54 IST1783052679206
உத்தரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று சாலையோரம் நின்றுகொண்டிருந்த அரசு பஸ் மீது மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 11.30 மணியளவில் அரசு பஸ்சில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. பழுது பார்ப்புக்காக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சிலும், பல பயணிகள் கீழே இறங்கி அருகில் நின்றுகொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த லாரி மோதியது. இந்த விபத்து நள்ளிரவு நிகழ்ந்துள்ளது.

