அண்ணாமலை கையால் பதக்கம் வாங்க மறுத்த டிஆர்பி ராஜா மகன்..!
புதுக்கோட்டை பகுதியில் பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய போட்டியாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழாவில், முக்கிய விருந்தினராக முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
அண்ணாமலை மேடையில் அமர்ந்து, வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பதக்கங்களை வழங்கி கொண்டிருந்தார். அப்போது திமுக எம்.எல்.ஏ TRB ராஜாவின் மகன் மேடைக்கு வந்தார். வழக்கம்போல அண்ணாமலை அவர் கைகளில் பதக்கத்தை கொடுக்க முயன்றார். ஆனால், அவர் பதக்கம் வாங்க மறுத்து, மேஜையில் வைக்கப்பட்டிருந்த பதக்கத்தை நேரடியாக தனது கைகளில் எடுத்து அணிந்துகொண்டார்.
இந்த சம்பவம் நடந்த தருணம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியது. சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பதிவாகின்றன. சிலர், இது அரசியல் காரணத்தால் செய்யப்பட்ட நடவடிக்கை என்று விமர்சிக்கின்றனர்.
TRB ராஜா திமுகவின் முக்கிய தலைவராகவும், முன்னாள் மத்திய அமைச்சர் TR பாலுவின் மகனாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


