உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டிக்கு டி.ஆர்.பி.ராஜா மகள் தேர்வு- டிவிட்டரில் பெருமிதம்

 
உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டிக்கு டி.ஆர்.பி.ராஜா மகள் தேர்வு- டிவிட்டரில் பெருமிதம்

ஜெர்மனியில் நடைபெறவுள்ள ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா ராஜா பாலு பங்கேற்ற உள்ளார். 

Dr. T R B Rajaa on Twitter: "Our beloved brother @tondaimanpr MAKES THE  STATE PROUD again !!! BAGS the SILVER for @TNShooting at the 65th National  Men Shotgun #Shooting Championship today in

ஜெர்மனியின் சுஹ்ல் நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், ஜூனியர் உலகக் கோப்பை 2023 நடைபெறவுள்ளது. ஜூன் ஒன்று முதல் ஆறாம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில் ரைபிள்/பிஸ்டல்/ஷாட்கன் பிரிவில் பங்கேற்கவுள்ளவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா ராஜா பாலு தேர்வாகியுள்ளார். 



இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “தென்னிந்தியாவின் இளைய துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ள எனது மகள் நிலா ராஜாவை எண்ணி ஒரு அப்பாவாக பெருமைப்படக்கூடிய தருணம். உலக அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகக் கோப்பையில் #TrapShooting நிகழ்வில், தமிழ்நாட்டின் இளைய பெண்மணி நிலா ஆவார். என்னுடைய சிறுவயது கனவு. நான் காணக்கூடிய கனவை எனது குழந்தை நனவாக்குவதை பார்ப்பது உண்மையிலேயே பாக்கியம்” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக டெல்லியில் நடைபெற்ற 65 வது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் நிலா ராஜா தங்க பதக்கம் வென்றது குறிப்பிடதக்கது.