#TRBRajaa "மட்டன் பிரியாணி".. "சில்லறைக் கட்சி".. மீண்டும் அண்ணாமலையை கலாய்த்த டி.ஆர்.பி. ராஜா !
Mar 25, 2024, 18:57 IST1711373252130
கோவை: சூலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கோவை தொகுதியின் தேர்தல் பொறுப்பாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "எங்களை எதிர்த்து நிற்கும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழக்கும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றிய அளிக்கக்கூடிய தொகுதியாக கோவை தொகுதி உள்ளது.
எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் அற்புதமான முறையில் களப்பணியாற்றி வருகின்றனர் என்று கூறினார்.
மேலும் அண்ணாமலை குறித்த கேள்விக்கு, "எதிரில் அதிமுக என்னும் பிரதான கட்சி என்ன சொல்கிறது என்பதற்கு மட்டும் பதில் சொல்லலாம். சில்லறைக் கட்சிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. எங்களுடைய எதிரி அதிமுக மட்டும் தான் அவர்களை எதிர்த்து நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று கவனம் செலுத்தி ஓடிக்கொண்டிருக்கிறோம். சுற்றி இருப்பவர்களை பார்த்தால் கவனச்சிதறலாகும். களத்தில் இருக்கும் எதிரியை வீழ்த்தி கோவை தொகுதியை திமுக நிச்சயமாக கைப்பற்றும் என்று பதில் அளித்தார்.