மதுரையில் திரிஷா நற்பணி மன்றம் சார்பில் முதல்வர் விஜய்க்கு போஸ்டர்..!
தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு வரும் முதல்வர் விஜய்யை வரவேற்று திரிஷா நற்பணி மன்றத்தினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டரில் தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்மாமன் இல்லை என்று வருத்தப்படும் தாய்மார்களுக்குத் தன்னையே தாய்மாமன் என்று கூறி மகிழ்ச்சியடையும் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களுக்குத் தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றி" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், முதலமைச்சர் விஜய்குழந்தையைக் கையில் ஏந்தியிருக்கும் படமும், நடிகை திரிஷா உள்ளிட்டோரின் படங்களும் அந்த விளம்பரப் போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளன.
அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஒட்டியதாக கூறப்படும் சில போஸ்டர்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்களில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதம் எழுந்துள்ளது.

