முதலமைச்சர் விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய த்ரிஷா! இன்ஸ்டாகிராமில் ஹார்ட்டின் எமோஜியுடன் வைரலாகும் பதிவு!

 
1

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடி விஜய் - த்ரிஷா. விஜயின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த கில்லி படத்தில், தனலட்சுமியாக நடித்த த்ரிஷா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருப்பார். திருப்பாச்சி, ஆதியைத் தொடர்ந்து, 2008இல் வெளியான குருவி படத்திலும் விஜய் - த்ரிஷா ஜோடி இணைந்தனர். பின்னர், 15 ஆண்டுகளுக்கு பிறகு லியோ படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.


அவ்வப்போது விஜயுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வாழ்த்துகளை சொல்லி வந்தார் நடிகை த்ரிஷா. 2024இல் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை ஆரம்பித்த விஜய், அந்தாண்டு இறுதியில் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்காக, விஜயும், த்ரிஷாவும் தனி விமானத்தில் பயணித்தது தொடர்பான வீடியோ அப்போது வைரலானது.

இதனிடையே அண்மையில் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார் சங்கீதா.ஒரு நடிகையுடன் தமது கணவர் விஜய் தொடர்பில் இருப்பதாக சங்கீதா தமது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


விஜய் முதல்வராவதற்கு முன்பே திருமண நிகழ்வில் இருவரும் ஒரே நிற ஆடையில் பங்கேற்றனர். தொடர்ந்து முதல்வர் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் திரிஷா அமர்ந்திருந்தார். நடிகர் அஜித்தின் தாயார் மறைவுக்கு இருவரும் ஒன்றாக வந்தனர். இவையெல்லாம் அந்த சமயங்களில் விவாதமானது. இப்படியான சூழலில் இந்தாண்டு விஜய்க்கு திரிஷா பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை, இன்ஸ்டாவில் அவரை அன்பாலோ செய்ததாக செய்தி பரவியது.

இந்நிலையில் முதல்வர் விஜய் பிறந்தநாளுக்கு அவருடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய போட்டோவை திரிஷா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதன் உடன் "எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்"" என குறிப்பிட்டு அன்பின் வெளிப்பாடான ஹார்ட்டின் மற்றும் எப்போதும் வெளியிடும் கண் வடிவிலான எமோஜியையும் பகிர்ந்துள்ளார். சரியாக இரவு 12 மணிக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்து இருக்கும் என தெரிகிறது.