திருவண்ணாமலையில் திமுக பிரமுகரை ஓட ஓட வெட்டி கொல்ல முயற்சி- 5 கைது

 
கொல்ல முயற்சி

திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டி கொல்ல முயற்சித்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


திருவண்ணாமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 42). முன்னாள் திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளர். மேலும் இவர் கட்டிட ஒப்பந்ததாரர். கடந்த 30 ஆம் தேதி இரவு சுமார் 7 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தீபம் நகர் வழியாக திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது முத்து சென்ற மோட்டார் சைக்கிளை ஒரு கார், 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. 

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி போளூர் சாலையில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் அருகில் அவர்கள் மோட்டார் சைக்கிள் வரும் போது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மா்ம நபர்கள் திடீரென முத்துவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்துள்ளனர். இதனால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் முத்துவையும், ராஜேஸையும் அரிவாளால் வெட்ட முயன்றனர்.

இதில் ராஜேஷ் தப்பி ஓடி ஆவின் பால் குளிரூட்டும் மையத்திற்குள் சென்றனர். முத்துவை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரை ஓட, ஓட விரட்டி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு தலை, கை உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் தப்பியோடிய ராஜேஷ் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பொது மக்கள் வருவதை கண்ட மர்ம நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த நிலையில் கிடந்த முத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து தகவலிருந்த திருவண்ணாமலை நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும்  கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வடக்கு தெருவை சேர்ந்த இளைஞர் ஷியாம் என்ற இளைஞரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.  இதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வடக்குத்தெரு ஏரியாவில் பேனர் வைத்த விவகாரத்தில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்த அடிப்படையில் போலீசார் வேங்கிக்கால் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி, ஜன்னத் நகர் பகுதியைச் சேர்ந்த அஷ்ரப், கிளிப்பட்டு செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருண், ஜெய்பீம் நகரைச் சேர்ந்த பிரவீன் ஆகிய 5 குற்றவாளிகளை திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நீதிமன்றம் இரண்டு நீதிபதி தெய்வீகன் முன்பு ஆஜர் படுத்தினர்.

பரபரப்பு… திமுக பிரமுகரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய கும்பல்!

வழக்கை விசாரித்து நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன் பெயரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 குற்றவாளிகளும் வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.