ஆருத்ரா மோசடி- அண்ணாமலைக்கு ரூ.200 கோடி, அமர் பிரசாத்துக்கு ரூ.100 கோடி! பகீர் கிளப்பும் சூர்யா
ஆருத்ரா மோசடியில் அண்ணாமலைக்கு தொடர்பு இருப்பதாக அண்மையில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அமர்பிரசாத்தின் நேர்காணல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள திருச்சி சூர்யா, “அண்ணாமலையை தூய்மையானவர் என்றும் சொல்லும் அமிர் பிரசாத், ஆருத்ரா மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளி ஹரிஷ் பிரதமரை பார்ப்பதற்கு அனுமதி கோரி சண்டையிட்ட பொழுது நேரில் இருந்தவன் நான். ஹரிஷ் அண்ணாமலைக்கு கொடுத்தது 200 கோடி, கேசவ விநாயகத்துக்கு 200 கோடி மேலும் மீதம் 100 கோடி வாங்கியது நீதானடா குட்டி யானை அமர் பிரசாத்.
அண்ணாமலை ஆயிரம் கோடி சம்பாதித்தால் 150 கோடி மாதேஷ்க்கு தருகிறேன் என்றால் உங்களின் மறைமுக பங்காளி வேடம் வெளிப்படையாக தெரிகிறதே! மோடி கபடி போட்டி எனும் ஒரு மோசடி போட்டியை நடத்தி தமிழ்நாடு முழுவதும் நீ நடத்திய ஊழல்களை வெளியிட்ட அண்ணன் மாரிதாஸ் இடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு எதுவும் போட வேண்டாம் என கெஞ்சிய புகைப்படத்தை வெளியிட தயாராக இருக்கிறேன்!
அண்ணாமலையை தூய்மையானவர் என்றும் சொல்லும் அமிர் பிரசாத்
— Tiruchi Suriyaa (@TiruchiSuriyaa) July 18, 2024
ஆருத்ரா மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளி ஹரிஷ் பிரதமரை பார்ப்பதற்கு அனுமதி கோரி சண்டையிட்ட பொழுது
நேரில் இருந்தவன் நான். ஹரிஷ் அண்ணாமலைக்கு கொடுத்தது 200 கோடி
கேசவ விநாயகத்துக்கு 200 கோடி!
மேலும் மீதம் 100 கோடி வாங்கியது… pic.twitter.com/jOX4JA8Bwk
மூன்று மாதங்களாக உதயநிதி ஸ்டாலின் இடம் திமுகவில் சேர்த்துக்கொள்ள கெஞ்சி கொண்டிருக்கிறான் இந்த மலமாடு. திருச்சி marriot ஹோட்டலில் குடித்துவிட்டு பணம் தராமல் அடாவடி செய்தது! L. முருகன் மாநில தலைவராக இருந்த பொழுது திருச்சியில் மூன்று வருடத்திற்கு முன்பு femina ஹோட்டலில் குடித்துவிட்டு அப்பொழுதும் பணம் கொடுக்க மறுத்த மல மாட்டின் சாதனை இதுதான்!! குடித்ததற்கு பணம் தராமல் அடாவடி செய்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது மறந்து விட்டாயா?

ராம சீனிவாசன் ஆடியோ வெளியிட வேண்டாம் என 2 கோடி ரூபாய் பணம் வாங்கித் தருகிறேன் என பேரம் பேசிய புரோக்கர் நீதானே? (reddiyar) மாமா பயலே அமர் பிரசாத். அண்ணாமலை 10000 கோடி சம்பாதித்தால் அண்ணாமலை இடமிருந்து திருடி 2000 கோடி சம்பாதித்து இருப்பாய்! ஆதாரம் வெளியிடுப்படுவது உறுதி! நீ தூக்கில் தொங்குவது உறுதி!!. பிரபல ஜவுளிக்கடையில் 4 கோடி மிரட்டி பணம் வாங்கிய வீடியோ என்னிடம் இருக்கிறது தூக்குல் தொங்க தயாரா? முதல் வீடியோ போடவா இது உன் தலைவன் என்னிடம் கொடுத்தது தான்? இவ்வளவு நேரம் என்னிடம் நீ என்ன பேசினாய் என்பதை கூறவா? உன் தலைவன் உன்னை கொன்று விடுவான் பார்த்துக்கொள்” என பதிவிட்டுள்ளார்.


