‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிச்சாம்’... திருச்சி சூர்யாவுக்கு ஆதரவாக போஸ்டர்

 
திருச்சி சூர்யா சிவா

திருச்சி சூர்யாவை கட்சியை விட்டு நீக்கிய பாஜகவை எச்சரித்து புதுக்கோட்டை நகரப் பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டிய சமூக அமைப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி சூர்யா பாஜகவிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து பாஜகவை எச்சரித்து புதுக்கோட்டை நகரப்பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில்  “ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம்...மண்ணின் மைந்தர்களுக்காக குரல் கொடுத்த முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த திருச்சி சூர்யாவை வேடந்தாங்கல் பறவைகளுக்கு ஆதரவாக கட்சியிலிருந்து நீக்கிய பாஜகவே.. முக்குலத்தோர் சமூகத்தை பகைத்துக் கொள்ளாதே என எச்சரிக்கிறோம்” என்று கூறி‌ நேதாஜி மக்கள் நல சங்கத்தைச் சேர்ந்த புதுவை ராஜ குரு தேவன் என்ற பெயரில் அவரது புகைப்படத்துடன் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.