திருச்சி சூர்யாவுக்கு மீண்டும் பாஜகவில் பொறுப்பு- அண்ணாமலை

 
திருச்சி சூர்யா சிவா

சூர்யாசிவா கட்சியின்‌ ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால்‌, ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின்‌ அடைப்படையில்‌ 24.11.2022 முதல்‌ கட்சியின்‌ அனைத்து பொறுப்புகளில்‌ இருந்தும்‌ 6 மாத காலத்திற்கு நீக்கம்‌ செய்யப்பட்டிருந்தார்‌.  அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரு. சூர்யாசிவா அவர்கள்‌, தான்‌ வகித்து வந்த பதவியில்‌ மீண்டும்‌ தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார்‌. 

Image

திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் தமிழக பாஜகவின் ஓ.பி.சி. பிரிவின் மாநில செயலராக இருந்து வந்தார். பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணும், சூர்யா சிவாவும் அலைபேசியில் மோதிக் கொண்ட ஆடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. அந்த ஆடியோவில் சூர்யா சிவா, டெய்சி சரணை தகாத வார்த்தைகளில் பேசியது தெரிய வந்ததை தொடர்ந்து, அவரை ஆறு மாத காலத்திற்கு தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடவடிக்கை மேற்கொண்டார்.

இதனிடையே பாஜகவில் அண்ணமலைக்கு நெருக்கமாக இருந்த திருச்சி சூர்யா சிவா, தற்போது அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல் வந்தது. அண்ணாமலை- எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் தொடரும் நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையை காலி செய்யவே திருச்சி சூர்யா சிவாவை அதிமுக தன் பக்கம் இழுத்திருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் திருச்சி சூர்யா, நான் அதிமுகவில் சேரவில்லை என விளக்கம் அளித்திருந்தார். 

Surya siva

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரு.சூர்யாசிவா அவர்கள்‌ கட்சியின்‌ ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால்‌, ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின்‌ அடைப்படையில்‌ 24.11.2022 முதல்‌ கட்சியின்‌ அனைத்து பொறுப்புகளில்‌ இருந்தும்‌ 6 மாத காலத்திற்கு நீக்கம்‌ செய்யப்பட்டிருந்தார்‌.  அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரு. சூர்யாசிவா அவர்கள்‌, தான்‌ வகித்து வந்த பதவியில்‌ மீண்டும்‌ தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.