அண்ணாமலையை தமிழகத்தின் முதல்வராக்க முனைப்புடன் இனி செயல்படுவேன்- திருச்சி சூர்யா

அண்ணாமலை அவர்களை தமிழகத்தின் முதல்வராக்க முனைப்புடன் இனி செயல்படுவேன் என்பதை இந்த தருணத்தில் என் உறுதி மொழியாகவே அளிக்கிறேன் என பாஜகவில் மீண்டும் சேர்க்கப்பட்ட திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் தமிழக பாஜகவின் ஓ.பி.சி. பிரிவின் மாநில செயலராக இருந்து வந்தார். பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணும், சூர்யா சிவாவும் அலைபேசியில் மோதிக் கொண்ட ஆடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. அந்த ஆடியோவில் சூர்யா சிவா, டெய்சி சரணை தகாத வார்த்தைகளில் பேசியது தெரிய வந்ததை தொடர்ந்து, அவரை ஆறு மாத காலத்திற்கு தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கி கடந்த ஆண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில் அவருடைய வேண்டுகோளுக்கிணங்க சூர்யாசிவா, தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுவதாக இன்று அண்ணாமலை மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள திருச்சி சூர்யா சிவா தனது ட்விட்டர் பக்கத்தில், “*ஃபீனிக்ஸ் பறவையானேன்..!* கடமை, கண்ணியம் என்ற வார்த்தைகளை முற்றிலுமாக மறந்து போன திராவிட அரசியலுக்கு எதிராக, கட்டுப்பாட்டு என்ற சொல்லின் பொருள் விளங்க அரசியல் போர் தொடுத்து, தொண்டர்கள் அனைவரையும் அரவணைப்பது போல மீண்டும் என்னை அரவணைத்து ஃபீனிக்ஸ் பறவையாக மாற்றிய எங்கள் அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கும், அண்ணன் கேசவ விநாயகம் அவர்களுக்கும் எனக்கு தோள் கொடுத்து நின்ற மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
*ஃபீனிக்ஸ் பறவையானேன்..!*
— Trichy Suriya Shiva (@TrichySuriya16) November 2, 2023
கடமை, கண்ணியம் என்ற வார்த்தைகளை முற்றிலுமாக மறந்து போன திராவிட அரசியலுக்கு எதிராக, கட்டுப்பாட்டு என்ற சொல்லின் பொருள் விளங்க அரசியல் போர் தொடுத்து, தொண்டர்கள் அனைவரையும் அரவணைப்பது போல மீண்டும் என்னை அரவணைத்து ஃபீனிக்ஸ் பறவையாக மாற்றிய எங்கள் அண்ணன்… pic.twitter.com/YrQZYt82ec
பாரதத்தாயின் முதல் மகன், தாய்நாட்டின் தலைமகன், பாரதத்தின் நிரந்தர பிரதமர் மாண்புமிகு மோடி ஜி அவர்களின் கனவினை நனவாக்க, திரு.அண்ணாமலை அவர்களை தமிழகத்தின் முதல்வராக்க முனைப்புடன் இனி செயல்படுவேன் என்பதை இந்த தருணத்தில் என் உறுதி மொழியாகவே அளிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.