திமுக துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமனம்!

திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இர்ந்து அமைச்சர் பொன்முடி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த பொறுப்புக்கு திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி, வைணவம் மற்றும் சைவம் குறித்தும் விலைமாதுகள் குறித்தும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொன்முடியின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார். அமைச்சர் பொன்முடி வகித்து வந்த திமுக துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்புக்கு திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக சட்டதிட்ட விதி: 17 பிரிவு 3-ன்படி கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திரு. திருச்சி சிவா, எம்.பி., அவர்களை, அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, தி.மு.க. துணைப் பொதுசெயலாளராக நியமிக்கப்படுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.