திருச்சி சட்டப் பல்கலை. - செமஸ்டர் தேர்வெழுத 2 மாணவர்களுக்குத் தடை

 
tn

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் படிப்பு இறுதியாண்டு படித்து வரும் பட்டியலின மாணவருக்கு  குளிர்பானத்தில்  சிறுநீர் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக மாணவர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.

tn

இந்நிலையில்  திருச்சி சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேருக்கு நடப்பாண்டு செமஸ்டர் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டியலின மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

suspend

ராகிங்கில் ஈடுபட்டதால் 2 மாணவர்களும் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்; 2 மாணவர்களும் 10ஆவது செமஸ்டர் தேர்வை எழுத ராகிங் தடுப்புக் குழு தடை விதித்துள்ளது.