திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு
May 14, 2026, 16:43 IST1778757212986
திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக தொடர விருப்பம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா முதலமைச்சர் விஜய் செய்தார். இதனையடுத்து திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இனி இடைத்தேர்தல் நடத்த பணிகளை தொடங்கும்.

