தமிழக போலீசார் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட விவகாரம் - திருச்சி கமிஷ்னர் விளக்கம்

 
Trichy Comissioner

திருட்டி வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தமிழ்நாடு போலீசாரை ராஜஸ்தான் மாநில காவல்துறை சிறைபிடித்த விவகாரம் தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா விளக்கம் அளித்துள்ளார். 

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர்கள் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் திருச்சி, மதுரை ,திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் 255 சவரன் நகைகளை அவர்கள் கொள்ளை அடித்தனர். திருச்சியில் மட்டும் 170 சவரன் கொள்ளை போனது. இது தொடர்பாக நகைகளை மீட்க கன்டோன்மெண்ட் உதவியாளர் கென்னடி தலைமையில் 15 போலீசார் கைது செய்யப்பட்ட ஆகிய இருவரை அழைத்து கொண்டு ராஜஸ்தான் விரைந்தனர். அவர்கள் அங்கு 300 கிராம் நகைகளை தந்து விட்டு மீதம் உள்ள நகைகளை விற்று விட்டோம் அதற்கு பதிலாக 25 லட்சம் ரூபாய் பணம் தருகிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் பணத்தை பறிமுதல் செய்வதற்கு அவர்கள் கூறிய இடத்திற்கு தனிப்படை போலீசாரில் 12 பேர் அங்கு சென்றனர். 

அப்போது கொள்ளையர்களின் உறவினர்கள் தமிழ்நாடு போலீசார் தங்களிடமிருந்து பணத்தை லஞ்சமாக பெற முயற்சிக்கின்றனர் என  ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தனர். அதனால் அங்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த தனிப்படை போலீசார் 12 பேரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் உரிய ஆவணங்களை காட்டி எதற்காக ராஜஸ்தான் வந்தோம் என்பதை விளக்கி கூறியுள்ளனர். அதன் பின்பு உரிய ஆவணங்களை பெற்ற பின்பு அவர்களின் ஒப்புதலோடு கொள்ளையர்களின் சொத்துக்களை மீட்ட போலீசார் அவர்களோடு தற்பொழுது திருச்சிக்கு திரும்பினர். அவர்களிடமிருந்து 300 கிராம் நகை மீட்கப்பட்டது.

tamilnadu police

இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா நிருபர்களிடம் கூறியதாவது:- 1,000 கண்காணிப்பு கேமராக்கள் திருச்சி தனிப்படை போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ராஜஸ்தானில் மீட்பதற்கு சென்றபோது, தவறான தகவலால் அந்த மாநில போலீசார் தனிப்படையினரை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். இது குறித்து அவர்களிடம் விளக்கி கூறியபிறகு, அவர்கள் அனைவரையும் விடுவித்துள்ளனர். திருச்சி மாநகரத்தில் மட்டும் 183 பவுன் நகைகள் மீட்கப்பட வேண்டும். ஆனால் தற்போது 37½ பவுன் நகைகள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் 4 பேரும் திருச்சி மாநகரத்தில் ஜெய்நகர், ராமலிங்காநகர், சக்திநகர், வயர்லெஸ்ரோடு, ஆர்.எம்.எஸ்.காலனி உள்ளிட்ட இடங்களில் கொள்ளையடித்துள்ளனர். திருச்சி மாநகரத்தில் வடமாநில தொழிலாளர்கள் 5 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இங்கு அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. திருச்சி மாநகரத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ளோம். அந்தவகையில் 1,000 கண்காணிப்பு கேமராக்கள் தேவைப்படுகிறது. மேலும், கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய இடங்களையும் தேர்வு செய்துள்ளோம். மேலும், குடியிருப்போர் சங்கங்களையும் ஒருங்கிணைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.