திருச்சியில் பரபரப்பு: நாளை முதல்வர் விஜய் வரவிருந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சட்டசபை தேர்தலில் முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன்பிறகு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சியமைப்பதில் தீவிரமாக இருந்ததால், திருச்சிக்கு முதல்வர் விஜயால் செல்ல முடியவில்லை.
இந்த சூழலில், தவெகவுக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க நாளை திருச்சி வர இருக்கிறார். மாலை 4 மணியளவில் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.முதல்வரின் வருகையையொட்டி,
திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும்,டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
மேலும், இந்த மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

