திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

 
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள்

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை 8.30 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும் இது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

rain

நாகைக்கு தெற்கு-தென் கிழக்கு பகுதியில் 6.30 கிலோ மீட்டர் தூரத்திலும், திரிகோணமலைக்கு தெற்கு-தென்கிழக்கில் 340 கிலோ மீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 750 கிலோ மீட்டர் தெற்கு-தென்கிழக்கிலும் நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வங்க கடலில் நாளை ஃபெங்கல் புயல் உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெங்கல் புயல் இலங்கை கடற்கரையை தொட்டபடி தமிழகத்தை நோக்கி நகரும் எனவும், சென்னை-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 நாளைக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய முனைவர் பட்ட இணையவழி நுழைவுத்  தேர்வில் தொழில் நுட்பக்கோளாறு - மாணவ, மாணவிகள் அவதி...! - Rockfort Times

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை நடைபெற இருந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் தெரிவிக்கப்படும் என தேர்வு நெறியாளர் ஜெயபிரகாஷ் அறிவிக்கப்பட்டுள்ளன.