விஜயகாந்த் நினைவிடத்தில் டிடிஎப் வாசன் மரியாதை

 
டிடிஎப் வாசன்

யூடியூப் பிரபலம் டிடிஎப் வாசன் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிஎப் வாசன், “தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அதனை செய்த மாபெரும் மனிதர் கேப்டன் விஜயகாந்த். அந்த மனிதருக்கு இன்று மரியாதை செய்துள்ளோம். 20 நாட்களாக முதுகு வலிக்கு கேரளாவில் சிகிச்சை எடுத்து வந்ததால்  விஜயகாந்த் நினைவிடத்திற்கு வர முடியவில்லை என்றும் அதனால் தான் இன்று வந்து மரியாதை செலுத்தினோம். விஜயகாந்த் அவர் ஒரு மாபெரும் மனிதர். நானும் அன்னதானம் செய்து கொண்டு தான் இருக்கிறேன். இனிமேல் இன்னும் அதிகமாக செய்வேன்.

அடிக்கடி நீதிமன்றத்திற்கு சென்று கொண்டு இருக்கிறேன். இன்று கூட நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு தான் இங்கு வந்தேன். டிடிஎப் வாசன் தொடங்கி உள்ள பஞ்சர் போட பயன்படும் டிடிஎப் liquid மற்றும் ஜிபிஎஸ் டிராக்கர் நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை காப்பி அடித்து அது போலவே தயார் செய்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. எனது நிறுவனத்தை வைத்து நான் ஊழல் எதுவும் செய்யவில்லை. இது போன்ற குற்றச்சாட்டுகள் தவறானது. அதற்கான விளக்கத்தை என் யூடியூப் பக்கத்தில் நான் கொடுத்துள்ளேன். ங்கள் நிறுவனத்தில் மென்பொருள்,PCB board உள்ளிட்டவற்றை நாங்களே தயாரிக்கிறோம். மற்ற நிறுவனத்தை காப்பி அடிக்கவில்லை” என்றார்.