கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை

 
TN

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் டிஆர்பி ராஜா மரியாதை செலுத்தினார்.

tn

தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா இன்று காலை பதவியேற்றார்.  முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ரவி பதவிப்பிரமாணமும்,  ரகசிய காப்ப பிரமாணமும் அவருக்கு செய்து வைத்தார் . இதை தொடர்ந்து தமிழக நிதி துறை அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மூன்று அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

TTN

அதேபோல் தங்கம் தென்னரசு வசம் இருந்த தொழில்துறை புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டிஆர்பி ராஜாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜிடம் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமைச்சர் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சி துறை கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.