முதல்வர் ஸ்டாலினுக்கு தந்த ஒட்டகத்திற்கு சிகிச்சை

 
ச்


முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட ஒட்டகத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதற்காக அந்த ஒட்டகம் விலங்குகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

 முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் 1ஆம் தேதி அன்று தனது 70 வது பிறந்த நாளை கொண்டாடினார்.  அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், கட்சி தொண்ர்கள் என பலரும் வந்து அவருக்கு வாழ்த்த்ஹ்அப்போது திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் முதல்வருக்கு பிறந்தநாள் பரிசுகளை வழங்கினார்கள் .

ச்ச்

அந்த சமயத்தில்,  பாலைவனங்களில் வாழும் ஒட்டகம் முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கப்பட்டது . இந்த ஒட்டகம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முதல்வரின் உறவினர் தோட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது. 

 ஒட்டகத்தின் கழுத்தில் முடி உதிர்வு ஏற்பட்டது . மேலும் சோர்வாகவும் காணப்பட்டது.  இதை அடுத்து ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் விலங்குகள் நல அமைப்பிடம் சிகிச்சைக்காகவும் தொடர் பராமரிப்புக்காகவும் அந்த ஒட்டகம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.