தவெகவில் பொருளாளர் வெங்கட்ராமன் புறக்கணிப்பு
தவெகவின் பொருளாளர் வெங்கட்ராமன் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேற்று சென்னை வரவழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்திருந்த நிகழ்வில், கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளே அனுமதிக்கப்படாமல் தனியார் பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். விஜய் இரங்கல் தெரிவிக்கும் நிகழ்விற்கான உரிய அடையாள அட்டை காண்பிக்காததால் 15 நிமிடம் வரை நுழைவாயிலுக்கு வெளியே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு அவமதிக்கப்பட்ட நிலையில், விஜய் தற்போது அறிவித்துள்ள 28 பேர் கொண்ட புதிய நிர்வாக குழுவிலும் பொருளாளர் வெங்கட்ராமன் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முதல் புதிதாக கட்சியில் இணைந்த அடிப்படை உறுப்பினர் வரை அந்த குழுவில் இடம் பெற்றுள்ள நிலையில் பொருளாளர் வெங்கட்ராமன் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


