2025 Recape... ஸ்டாலின் செய்த சம்பவத்தை ஒரே வீடியோவில் சொன்ன அமைச்சர் டிஆர்பி ராஜா

 
ச் ச்

2025ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசின் ROUND UP குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ச்

அந்த வீடியோவில், அரசியலில் சொகுசுக்கு இடமில்லை என்பதில் தொடங்கி... தமிழக அரசு இந்தாண்டு செய்த பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் பட்டியலிடபட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 15 ஆயிரம் கிலோமீட்டர் சாலை வாயிலாக பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நிதி தராமல் இழுத்தடிப்பது, வரி உரிமையை தடுப்பது, திட்டங்களை வரவிடாமல் தடுக்கிறது, ஆளுநர் மூலமாக ஓயாமல் தொல்லை கொடுப்பது என தமிழ்நாட்டுக்கு எதிராக மத்திய பாஜக அரசு கொடுக்கும் அரசியல் அழுத்தத்தையும் தாங்கி மு.க.ஸ்டாலின் பயணித்ததாக வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது.

ச்

தமிழ்நாடு வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சியாக 11.19%-ஐ எட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப் பட்டிருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்திருப்பதை நூலாக வெளியிட்டே திமுகவுக்கு 2025 தொடங்கியதாக கூறப்பட்டுள்ள நிலையில், அதேபோல் அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு பிளான் போட்டதை தவிடுபொடியாக்கியதும் திமுக அரசுதான் என குறிப்பிடப்பட்டுள்ளது.  ஜி.எஸ்.டி. வரி அல்ல, வழிப்பறி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் விமர்சனம் செய்ததையும் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதேபோல் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என அனைத்து இந்திய தலைவர்களை திரட்டி ஆலோசனை நடத்தியது மட்டுமின்றி, தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என முழக்கம் எழுப்பியதும் மு.க.ஸ்டாலின் தான் என 2025 Recape வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வகர்மா திட்டத்தை மாற்றி கலைஞர் கைவினை திட்டமாக மாற்றியது, சமூக நீதி விடுதி, உங்களுடன் ஸ்டாலின்,  வடசென்னை வளர்ச்சி திட்டம், காக்கும் கரங்கள் திட்டம் என பல்வேறு திட்டங்களை திமுக உருவாக்கியதையும் வீடியோவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேபோல் வள்ளுவர் கோட்டம், தி.நகர் அன்பழகன் மேம்பாலம், கோவை ஜிடி நாயுடு மேம்பாலம், தொல்காப்பிய பூங்கா, கோவை செம்மொழி பூங்கா, திருச்சி பேரு்ந்து நிலையம், மதுரை வேலு நாச்சியார் மேம்பாலம், பொருநை அருங்காட்சியம் என பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி ஸ்மார்ட்டாக தாழ்தள பேருந்துகள் அறிமுகம், டிஜிட்டல் டிக்கெட், என பல்வேறு திட்டங்களும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, காலை உணவு திட்டம், அன்புச்சோலை, தாயுமானவர் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், புதுமை பெண் திட்டம், தமிழ்நாட்டுக்கு ரூ. 10 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடு திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.