அண்ணாமலை கையால் பதக்கத்தை வாங்க மறுத்த டிஆர்பி ராஜா மகன்!

 
ச்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடி பட்டியில் நடைபெற்று வரும் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சூடு போட்டியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்த நிலையில் அண்ணாமலை இடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு கையில் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடிபட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில்  தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து நடத்தும் 51வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் சிறப்பு விருந்தினராக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு கடந்த இரு தினங்களாக துப்பாக்கி சூடு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் வீராங்கனைகளுக்கு பதக்கங்களை  அவரவர்கள் கழுத்தில் அணிவித்தார். 


இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு போட்டியில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜா பாலு துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் அவரை பதக்கம் வாங்க அழைத்தபோது மேடைக்கு வந்த அவருக்கு அண்ணாமலை பதக்கத்தை அவரது கழுத்தில் அணிவிக்க  பலமுறை முயன்ற போதும் அதனை வாங்க மறுத்த சூரிய ராஜா பாலு அண்ணாமலிடமிருந்து கையில் அந்த பதக்கத்தை பெற்றுக்கொண்டு பின்னர் புகைப்படத்திற்கு நின்றார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.