மு.க.ஸ்டாலினின் உழைப்பை தமிழ்நாடு மறந்ததுதான் மிகுந்த வேதனை அளிக்கிறது- டி.ஆர்.பி.ராஜா

 
trb raja

தமிழ்நாட்டின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணமாக இருந்த எனது அருமை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களது உழைப்பை தமிழ்நாடு மறந்ததுதான் மிகுந்த வேதனை அளிப்பதாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தளத்தில், “எனது மன்னை தொடர்ந்து மின்னட்டும். மூன்று முறை வாய்ப்பளித்த எனது #மன்னார்குடி மண்ணுக்கு சேவை செய்யும் வாய்ப்பளித்து என்னை அரவணைத்த அனைவருக்கும், தற்போதும் வாக்களித்த எனது ஆருயிர் மக்களுக்கும் நன்றி. ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக எனக்கு கிடைத்த இந்த 5 ஆண்டுகளில் மட்டும் நமது மன்னைக்கு இது வரை யாரும் செய்திராத வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை கொண்டுவந்த பெருமையோடு இன்று (நீண்ட நாட்களுக்கு பிறகு) உறங்குவேன். மன்னையில் #திமுக வுக்கு வாக்களிக்க தவறியவர்கள் மன்னையின் அடுத்த 5 ஆண்டுகால வளர்ச்சியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணமாக இருந்த எனது அருமை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களது உழைப்பை தமிழ்நாடு மறந்ததுதான் மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரின் உழைப்பை காலம் போற்றும். என்றும் எனது மண்ணுக்கும் மக்களுக்கும் துணை நின்று தொடர்ந்து உழைப்பேன். தமிழ்நாட்டில் உள்ள #உடன்பிறப்புகள் அனைவரும் ஆட்சி இல்லாத போதும் தமிழுக்காக தமிழ்நாட்டிற்காக தொடர்ந்து உழைப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.