"அனிருத்- காவ்யாவுக்கு சுயமரியாதைத் திருமணம்?"- டி.ஆர்.பி ராஜா
கிரீஸ் நாட்டில் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. திருமணம் குறித்தான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்நிலையில் இது வேத முறை அல்லாத சுயமரியாதை திருமணம் போல் தெரிகிறது, நான் சொல்வது சரிதானா? என X தளத்தில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, "காவியாவும் அனிருத்தும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டனர்; திமுக தலைவர் காவியாவிடமும், சூப்பர்ஸ்டார் அனிருத்திடமும் செயினை வழங்கினர்; மணமக்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் செயினை பரிமாறிக் கொண்டனர்; நண்பர்கள் & குடும்பத்தினரின் வாழ்த்துகளுடன் இரு மனங்கள் இணையும் இந்த நிகழ்வு நடைபெற்றது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் கிரேக்க நாட்டில் உள்ள அழகிய சூழலில் கடந்த சில தினங்களாகத் தீவிரக் கொண்டாட்டங்களுடன் நடைபெற்றுள்ள நிலையில், தங்களது அதிகாரப்பூர்வ திருமணப் புகைப்படத்தை அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "My once in a lifetime, for a lifetime... 11.11" என்ற காதல் ததும்பும் வரிகளுடன் அவர் பதிவிட்டுள்ள இந்த இன்ஸ்டாகிராம் புகைப்படம் இணையத்தில் வெளியிட்ட மிகக் குறுகிய நேரத்திற்குள் கோடிக்கணக்கான லைக்குகளைக் குவித்து சமூக வலைதளங்களை உலுக்கியுள்ளதுடன், தென்னிந்தியத் திரையுலக வரலாற்றில் ஒரு மாபெரும் பாப் கலாச்சார நிகழ்வாகவும் (Pop Culture Event) ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

